காட்டாறு போல பொங்கும் சினப் பிசாசே
காட்டேரி போல உயிரை உறிந்து விடாதே
பாட்டாகி சிறுகதையாகி பெருஞ்செயலாகி
மீட்டாத யாழ்களிலே இசை பயில எனக்குதவு

புலவனா, கதைகட்டியா?
சிறியனா, ஆசிரியனா?
எட்டெட்டு சதுரத்தை
எண்ண நினைத்தவனா?
எட்டி உதைத்தவனா?
கணிப்பொறியில் கலைத்திறனை
காண முனைந்தவனா?
கண்டு வியந்தவனா?

இதர இணையங்களில்
இயந்திரமாய் இயங்குபவன்
இந்த இடத்தினிலே
இருக்க இயலுகின்றேன்

நேரான பேச்சை
நேராக பார்த்து
ஆறாது பேச
யாரெனினும் பேர்விருப்பம்

இவன், நவிலன்!